மத்திய அரசை கண்டித்து ம.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்து ம.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-08-09 15:57 GMT
வெளிப்பாளையம்:
பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்து ம.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
நாகை தலைமை தபால் நிலையம் முன்பு ம.தி.மு.க சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்தாத மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஸ்ரீதரன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் ராஜேந்திரசோழன் வரவேற்றார். 
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். 
கோஷங்கள்
மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் சட்டங்களை மத்திய அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் ஒன்றியச் செயலாளர்கள் ராமமூர்த்தி, பார்த்தசாரதி, உத்திராபதி, பாலசுப்பிரமணியன், மாமல்லன், பேரூராட்சி செயலாளர்கள் ஆனந்த், ஸ்ரீதரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நாகை ஒன்றிய செயலாளர் அய்யாபிள்ளை நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்