சங்கராபரணி ஆற்றுப்பாலத்தில் வாகனங்கள் அடுத்தடுத்து மோதல்

வில்லியனூர் சங்கரா பரணி ஆற்றுப்பாலத்தில் வாகனங்கள் அடுத்தடுத்துமோதிய விபத்தால் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2021-08-09 15:40 GMT
வில்லியனூர், ஆக
வில்லியனூர்    சங்கரா பரணி ஆற்றுப்பாலத்தில் வாகனங்கள் அடுத்தடுத்துமோதிய விபத்தால் ஒருமணி  நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அடுத்தடுத்து மோதல்
புதுச்சேரி-விழுப்புரம் தேசிய     நெஞ்சாலையில் வில்லியனூரை அடுத்த ஆரியபாளையத்தில் சங்கராபரணி ஆற்றின் குறுக்கே பாலம் உள்ளது. குறுகலான இந்த பாலத்தில் அடிக்கடி விபத்துகள் நடைபெறுவது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று காலை 8 மணியளவில் விழுப்புரத்தில் இருந்து புதுவைக்கு கூரியர் வாகனம் வந்துகொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த மினிலாரி எதிர்பாராத விதமாக கூரியர் வாகனம் மீது மோதியது. மினி லாரியை தொடர்ந்து வந்த காரும் விபத்துக்குள்ளானது.
அடுத்தடுத்து நடந்த இந்த விபத்தில் கூரியர் வாகனத்தின் கன்டெய்னர் பெட்டி சேதமடைந்து   பார்சல்கள் நாசமானது. இந்த விபத்தில் மினிலாரி டிரைவர் பலத்த காயமடைந்தார். விபத்து பற்றி தகவல் அறிந்த வில்லியனூர் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து விபத்தில் காயமடைந்த டிரைவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போக்குவரத்து பாதிப்பு
பாலத்தின் மையப்பகுதியில் நடந்த இந்த விபத்தால் போக்குவரத்து முழுமையாக பாதிக்கப்பட்டது. சாலையின் இருமார்க்கத்திலும் வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. நீண்ட போராட்டத்துக்கு பிறகு விபத்தில் சிக்கிய வாகனங்களை போக்குவரத்து போலீசார்   அங்கிருந்து  அப்புறப் படுத்தினர்.
இதையடுத்து சுமார் ஒருமணி நேரத்துக்கு பின் அப் பகுதியில் போக்குவரத்து சீரானது. இந்த விபத்து குறித்து        வில்லியனூர் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு       செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்