தூத்துக்குடியில் விவசாயிகள் மனித சங்கிலி போராட்டம்
தூத்துக்குடியில் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் நேற்று மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாயிகள் நேற்று மனிதசங்கிலி போராட்டம் நடத்தினர்.
மனித சங்கிலி போராட்டம்
தூத்துக்குடி மாவட்ட அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே மனிதசங்கிலி போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் நல்லையா தலைமை தாங்கினார். போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கைகோர்த்து மனித சங்கிலியாக நின்றனர்.
கோரிக்கை
போராட்டத்தில் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும், தொழிலாளர் சட்டங்களை திரும்ப பெற வேண்டும், நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும். 2020-21-ம் ஆண்டுக்கான பயிர் இழப்பு தொகையை உடனடியாக வழங்க வேண்டும், மின்சார திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும், போராடும் விவசாயிகளை அழைத்து பேச வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
போராட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் சரவணமுத்துவேல், தமிழ்நாடு பெண்கள் இணைப்புக்குழு மேரிஷீலா, முன்னாள் எம்.எல்.ஏ. ராஜேந்திரன், தூத்துக்குடி மாவட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் ராமையா உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.