தூத்துக்குடி மாவட்டத்தில் மது விற்ற 21பேர் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் மது விற்ற 21 பேரை போலீசார் கைது செய்தனர்;
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில், போலீசார் அனுமதியின்றி மதுவிற்பனை நடக்கிறதா? என்று கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் 19 போலீஸ் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் அனுமதியின்றி மதுவிற்ற 21 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 118 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.