பொதுமக்கள் சாலைமறியல்

திருப்பூரில் சாக்கடை கால்வாயை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-08-09 11:24 GMT
திருப்பூர்
திருப்பூரில் சாக்கடை கால்வாயை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியல்
திருப்பூர் வெள்ளியங்காடு அருகே உள்ள முத்தையன்கோவில் பகுதியில் ஏராளமானவர்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் அந்த பகுதியில் தேங்கியுள்ளது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. 
இதனால் அந்த பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. 
இதனால் சாக்கடை கால்வாயை சீரமைக்கக்கோரி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அதிகாரிகள் உறுதி
 தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதன் பின்னரே பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். 
-
--

மேலும் செய்திகள்