குண்டர் சட்டத்தில் வாலிபர் சிறையில் அடைப்பு
காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை வஞ்சுவாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 21), இவர்மீது மணிமங்கலம் போலீஸ் நிலையத்தில் வழக்கு உள்ளது.
இந்த வழக்கு சம்பந்தமாக மணிமங்கலம் போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தினேஷை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் பரிந்துரை செய்தார். அதன்பேரில் தினேஷை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கும்படி போலீஸ் சூப்பிரண்டுக்கு காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி உத்தரவிட்டார்.