செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 105 பேர் பாதிப்பு
செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 105 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 62 ஆயிரத்து 924 -ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 1 லட்சத்து 59 ஆயிரத்து 340 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.
நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2411-ஆக உயர்ந்துள்ளது. 1,173 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 38 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 72 ஆயிரத்து 33- ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 70 ஆயிரத்து 388 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர். நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,212- ஆக உயர்ந்துள்ளது. 443 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.