ஆடிப்பூர விழாவையொட்டி மேல்மருவத்தூர் ஆதி பராசக்தி அம்மன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை; கலெக்டர் தகவல்
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி அம்மன் கோவிலில் ஆடிப்பூர விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இதனால் கொரோனா தொற்று பரவுவதை தடுப்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் நலன் கருதி நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் 11-ந்தேதி (புதன்கிழமை) பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் தெரிவி்க்கப்பட்டுள்ளது.