காஞ்சீபுர மாவட்டத்தில் தேசிய கைத்தறி தின விழா
கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பில் மாவட்ட கலெக்டர் வளாக மக்கள் நல்லுறவு கூட்ட அரங்கில் 7-வது தேசிய கைத்தறி தின விழா மற்றும் கைத்தறி கண்காட்சியை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தொடங்கி வைத்தார்.;
இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி கைத்தறி நெசவாளர்களுக்கு முத்ரா கடன் திட்டத்தின் கீழ் 5 நெசவாளர்களுக்கு ரூ.10 ஆயிரம் மானியத்துடன் தலா ரூ.50 ஆயிரம் கடனுதவி, அரசின் முதியோர் ஓய்வூதிய திட்டத்தின் கீழ் 12 பேருக்கு ரூ.1000 வீதம் மாத ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகள், மேலும், 21 கைத்தறிநெசவாளர்களுக்கு அரசு பங்களிப்புடன் கூடிய சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்ட தொகை ஆணைகள் வழங்கினார். மேலும் காஞ்சீபுரம் அறிஞர் அண்ணா பட்டு மற்றும் காஞ்சீபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் 5 பேருக்கு தறி உபகரணங்கள் வழங்கப்பட்டது. விழாவில் எம்.எல்.ஏ.க்கள் க.சுந்தர், சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சீபுரம் அறிஞர் அண்ணா பட்டு கூட்டுறவு சங்க இணை இயக்குனர், மேலாண்மை இயக்குனர் மகாலிங்கம், காஞ்சீபுரம் முருகன் பட்டு கூட்டுறவு சங்க துணை இயக்குனர், மேலாண்மை இயக்குனர் விசுவநாதன், காஞ்சீபுரம் பட்டு மற்றும் காஞ்சீபுரம் டாக்டர் கலைஞர் கருணாநிதி பட்டு உதவி இயக்குனர், மேலாண்மை இயக்குனர் உஷாராணி, காஞ்சீபுரம் காமாட்சியம்மன் பட்டு உதவி இயக்குனர், மேலாண்மை இயக்குனர் ஆனந்த், காஞ்சீபுரம் திருவள்ளுவர் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்க உதவி இயக்குனர், மேலாண்மை இயக்குனர் சீனிவாசன், கைத்தறி மற்றும் துணிநூல் துணை இயக்குனர், தெய்வானை, கூட்டுறவு சங்க தலைவர்கள் மற்றும் நெசவாளர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.