கத்திமுனையில் தந்தை மகனை மிரட்டி ரூ 13 லட்சம் நகை பணம் கொள்ளை

தொண்டாமுத்தூர் அருகே வீடு புகுந்து கத்திமுனையில் தந்தை- மகனை மிரட்டி ரூ.13 லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்த முகமூடி ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.;

Update: 2021-08-09 03:23 GMT
பேரூர்

தொண்டாமுத்தூர் அருகே வீடு புகுந்து கத்திமுனையில் தந்தை- மகனை மிரட்டி ரூ.13 லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்த முகமூடி ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- 

விவசாயி 

கோவையை அடுத்த தொண்டாமுத்தூர் அருகே இக்கரை போளுவாம் பட்டி ஏகனூர் தோட்டத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 55), விவசாயி. இவருடைய மனைவி ருக்குமணி. இவர்களுக்கு, சுபாஷ்குமார் (29), அரிகிருஷ்ணன் (25) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். 

இதில் சுபாஷ்குமாருக்கு திருமணம் ஆகி விட்டது. குடும்பத்தினர் அனைவரும், ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.  நேற்று முன்தினம் சுபாஷ்குமார் அவரது மனைவி மற்றும் தாயார் ஆகியோர் வீட்டின் மாடியில் உள்ள அறையில் தூங்கிக் கொண்டிருந்தனர். 

முகமூடி கொள்ளையர்கள் 

கீழ்த்தளத்தில் அரிகிருஷ்ணனும், சுப்பிரமணியனும் படுத்து இருந்தனர். இந்த நிலையில், அதிகாலை 3 மணிக்கு வீட்டின் கதவு யாரோ தட்டும் சத்தம் கேட்டது. இதனால் அரிகிருஷ்ணனும், சுப்பிரமணியனும் விழித்தெழுந்து கதவை திறந்தனர். அப்போது வீட்டின் வெளியே முகமூடி அணிந்த மர்ம நபர்கள் 2 பேர் நின்று கொண்டு இருந்தனர்.

அதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தந்தையும், மகனும் வீட்டிற்குள் சென்று கதவை பூட்ட முயன்றனர். ஆனால் அதற்குள் முகமூடி கொள் ளையர்கள் கதவை தள்ளிக்கொண்டு வீட்டிற்குள் புகுந்தனர். பின்னர் கத்தியை எடுத்து அவர்களின் கழுத்தில் வைத்து சத்தமிட்டால் குத்தி கொன்று விடுவதாக மிரட்டினர்.

நகை, பணம் கொள்ளை

பின்னர் முகமூடி ஆசாமிகள், கத்திமுனையில் அவர்கள் 2 பேரையும் வீட்டில் இருந்த பீரோவை திறக்க சொன்னார்கள். வேறு வழி இல்லாத தால் அவர்கள் 2 பேரும் பீரோவை திறந்தனர். 

உடனே முகமூடி ஆசாமிகள் அதில் இருந்த 26 பவுன் நகை, ரூ.4 லட்சத்து 82 ஆயிரம் ரொக்கம் என மொத்தம் ரூ.13 லட்சத்தை கொள்ளையடித்தனர். இதற்கிடையே வீட்டின் கீழ் தளத்தில் சத்தம் கேட்டதால், மாடியில் தூங்கிக்கொண்டு இருந்தவர்கள் விழித்து எழுந்தனர். அப்போது வீட்டின் கீழ் தளத்தில் வேறுநபர்களின் நடமாட்டம் இருப்பதை உணர்ந்து அவர்கள் கூச்சல் போட்டனர்.

துரத்தி சென்றனர்

உடனே முகமூடி ஆசாமிகள் சுதாரித்துக்கொண்டு அந்த வீட்டை விட்டு வெளியேறினர். பின்னர் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி மின்னல் வேகத்தில் சென்றனர். 

இதைத்தொடர்ந்து சுப்பிரமணியன், சுபாஷ்குமார், அரிகிருஷ்ணன் ஆகியோர் தங்களின் மோட்டார் சைக்கிளில் அந்த முகமூடி கொள்ளையர்களை துரத்தி சென்றனர். இதற்கிடையே முகமூடி கொள்ளையர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் திடீரென்று பழுதானது. 

உடனே அவர்கள் மோட்டார் சைக்கிளை அங்கேயே போட்டுவிட்டு தப்பி ஓடி விட்டனர். இதனால் முகமூடி ஆசாமிகளை தேடி சென்ற சுப்பிரமணியன் மற்றும் அவருடைய மகன்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

பொதுமக்கள் அதிர்ச்சி

இது குறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து  முகமூடி ஆசாமிகளை வலைவீசி தேடிவருகிறார்கள். தொண்டாமுத்தூர் அருகே விவேகானந்தர் பகுதியில் கடந்த 2 வாரங் களுக்கு முன்பு, முகமூடி ஆசாமிகள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட னர். 

தற்போது அந்த பகுதியில் மீண்டும் முகமூடி ஆசாமிகள் வீடு புகுந்து துணிகரமாக கைவரிசை காட்டியது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்