காட்டெருமை கழுத்தில் சிக்கிய பிளாஸ்டிக் கயிறு அகற்றம்

காட்டெருமை கழுத்தில் சிக்கிய பிளாஸ்டிக் கயிறு அகற்றம்;

Update: 2021-08-09 03:23 GMT
கோத்தகிரி

கோத்தகிரி அருகே அனையட்டி கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான தேயிலை தோட்டத்தில் கழுத்தில் பிளாஸ்டிக் கயிறு இறுக்கிய நிலையில், தீவனம் எடுத்துக்கொள்ள முடியாமல் காட்டெருமை ஒன்று அவதிப்பட்டு சுற்றித்திரிவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. 

அதன்பேரில் நேற்று காலை 6 மணிக்கு நீலகிரி மாவட்ட வன அலுவலர் குருசாமி தபேலா, டாக்டர்கள் மனோகரன், ராஜேஷ் மற்றும் வனத்துறையினர் நேரில் சென்று பார்வையிட்டனர். பின்னர் துப்பாக்கி மூலம் காட்டெருமைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. 

ஆனால் மயக்கமடையாமல் தேயிலை தோட்டத்தையே சுற்றித்திரிந்தது. இதனால் மொத்தம் 6 முறை மயக்க ஊசி செலுத்தப்பட்டது. அதன்பின்னர் காட்டெருமை மயங்கி விழுந்தது. தொடர்ந்து அதன் கழுத்தில் இருந்த பிளாஸ்டிக் கயிறை வனத்துறையினர் வெட்டி அகற்றினர். மேலும் கழுத்தில் ஏற்பட்டு இருந்த காயத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மாலை 4 மணியளவில் மயக்கம் தெளிந்த காட்டெருமை, வனப்பகுதிக்கு சென்றது. 

மேலும் செய்திகள்