சேலம் மாவட்டத்தில் 89 பேருக்கு கொரோனா

சேலம் மாவட்டத்தில் மேலும் 89 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

Update: 2021-08-08 22:24 GMT
சேலம்:
சேலம் மாவட்டத்தில் மேலும் 89 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
கொரோனா பாதிப்பு
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 91 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டனர். நேற்று மேலும் 89 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது 
அதன்படி மாநகராட்சி பகுதிகளில் 24 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மகுடஞ்சாவடியில் 2 பேர், தாரமங்கலம், எடப்பாடி, கொளத்தூர், காடையாம்பட்டியில் தலா 3 பேர், சங்ககிரி, நங்கவள்ளி, மேச்சேரியில் தலா 4 பேர், வீரபாண்டியில் 5 பேர், ஓமலூரில் 9 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
ஆத்தூர், கெங்கவல்லி, வாழப்பாடியில் தலா ஒருவர், பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசலில் தலா 2 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதே போன்று நாமக்கல், ஈரோடு மாவட்டத்தில் இருந்து சேலத்திற்கு வந்த தலா 5 பேர் உள்பட 89 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 
4 பேர் பலி
இதன் மூலம் கொரோனா தொற்றால் மாவட்டத்தில் 94 ஆயிரத்து 59 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டத்தில் நேற்று 4 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 
இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 1,586 பேர் பலியாகி உள்ளனர்.

மேலும் செய்திகள்