கன்னங்குறிச்சியில் போலீஸ்காரரை தாக்கிய பெண் கைது
கன்னங்குறிச்சியில் போலீஸ்காரரை தாக்கிய பெண் கைது செய்யப்பட்டார்.;
கன்னங்குறிச்சி:
கன்னங்குறிச்சி மகாலட்சுமி நகரை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவருடைய மனைவி கலையரசி. இந்த தம்பதியின் மகன் அருண்குமார். இவரை சாய்பாபா காலனி பகுதியில் குடிசையில் 1 கிலோ கஞ்சா பதுக்கியது தொடர்பாக கன்னங்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்தி, ஏட்டு சிவஞானம், போலீஸ்காரர் பாலகிருஷ்ணன் ஆகியோர் சென்றனர். அப்போது கலையரசி போலீஸ்காரர் பாலகிருஷ்ணனை தாக்கியதுடன், வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வழக்குப்பதிவு செய்து கலையரசி கைது செய்யப்பட்டார்.