கர்நாடகத்தில் புதிதாக 1,598 பேருக்கு கொரோனா
கர்நாடகத்தில் புதிதாக 1,598 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பெங்களூரு:
இதுகுறித்து மாநில அரசின் சுகாதாரத்துறை, நேற்றைய பாதிப்பு குறித்து வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 446 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 1,598 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியானது. இதனால் மாநிலத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 29 லட்சத்து 18 ஆயிரத்து 525 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு மேலும் 20 பேர் உயிரிழந்தனர். இதனால் மாநிலத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆயிரத்து 793 ஆக உயர்ந்துள்ளது.
23 ஆயிரத்து 930 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். 1,914 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதனால் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 28 லட்சத்து 57 ஆயிரத்து 776 ஆக அதிகரித்துள்ளது. பெங்களூரு நகரில் 348 பேர், சிக்கமகளூருவில் 52 பேர், தட்சிண கன்னடாவில் 438 பேர், ஹாசனில் 80 பேர், குடகில் 83 பேர், மைசூருவில் 98 பேர், உடுப்பியில் 129 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு பெங்களூரு நகரில் ஒருவரும், தட்சிண கன்னடாவில் 6 பேரும், ஹாசன், கோலாரில் தலா 3 பேரும், தார்வார், உத்தரகன்னடாவில் தலா 2 பேரும் என மொத்தம் 20 பேர் உயிரிழந்தனர்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.