லோடு ஆட்டோவில் ரேஷன் அரிசி கடத்தல்
சங்கரன்கோவிலில் லோடு ஆட்டோவில் கடத்தப்பட்ட ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் ெரயில்வே பீடர் ரோட்டில் சங்கரன்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜாஹீர் உசேன், டவுன் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லோடு ஆட்டோவை சோதனை செய்தனர். சோதனையில் லோடு ஆட்டோவை ஓட்டி வந்தவர் நெடுங்குளம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பேச்சிமுத்து மகன் கணேசமூர்த்தி (வயது 21) என்பதும், அவர் ஆட்டோவில் 27 மூட்டைகளில் 1,200 கிலோ ரேஷன் அரிசியை கடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கணேசமூர்த்தியை கைது செய்தனர். மேலும் லோடு ஆட்டோவையும், 1,200 கிலோ ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.