கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து: தனியார் கல்லூரி முதல்வர் பலி

கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்தில் தனியார் கல்லூரி முதல்வர் உயிரிழந்தார்.

Update: 2021-08-08 20:17 GMT
துவரங்குறிச்சி, 
திருச்சி மாவட்டம் வளநாடு அருகே உள்ள மினிக்கியூர் பிரிவு அருகே திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு கண்டெய்னர் லாரியை அதன் டிரைவர் நிறுத்தி விட்டு சாப்பாடு வாங்கச் சென்றார். அப்போது சென்னையில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற கார் ஒன்று டயர் பஞ்சராகி இழுத்துச்சென்று கண்டெய்னர் லாரியின் பின்பகுதியில் பயங்கரமாக மோதி உருக்குலைந்தது. 
இந்த விபத்தில் காரில் சென்ற மதுரை கோச்சடை பகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணியன் (வயது 50) இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த வளநாடு போலீசார் பாலசுப்பிரமணியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் பலியான பாலசுப்ரமணியன் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதல்வராக பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்