மண்ணச்சநல்லூர் அருகே சேவல் வைத்து சூதாடிய 3 பேர் கைது

மண்ணச்சநல்லூர் அருகே சேவல் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-08-08 20:17 GMT

சமயபுரம், 
மண்ணச்சநல்லூர் அருகே காட்டுக்குளம் பெருமாள் கோவில் பகுதியில் சேவலை வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக மண்ணச்சநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் சிலர் தப்பி ஓடி விட்டனர். 3 பேர் மட்டும் போலீசாரிடம் சிக்கினர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுதம்(வயது 22), கோபால்(24), கண்ணன்(27) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 மொபட்டுகள், ரூ.300 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்த போலீசார் தப்பி ஓடியவர்களை தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்