2-வது நாளாக கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை
2-வது நாளாக கொரோனாவுக்கு யாரும் உயிரிழக்கவில்லை.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 10 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 29 பேரும் புதிதாக கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெறுபவர்களில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 7 பேரும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 21 பேரும் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். 2-வது நாளாக நேற்றும் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் யாரும் கொரோனாவுக்கு உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் 108 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 264 பேரும் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.