மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-08-08 19:32 GMT
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தை அடுத்த நாச்சியார்பேட்டை பெரிய ஓடையில் மணல் கடத்துவதாக மணகெதி கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திர பிரசாத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர், சுத்தமல்லி வருவாய் அலுவலருடன் நாச்சியார்பேட்டை பஸ் நிறுத்தம் அருகே வந்த டிராக்டரை தடுத்து நிறுத்தி சோதனை செய்ய முயன்றனர். அப்போது டிராக்டரை சாலை ஓரம் நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து டிராக்டரில் சோதனை மேற்கொண்ட போது, அதில் பெரிய ஓடையில் இருந்து மணல் கடத்தி வந்தது, தெரியவந்தது. இதுகுறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் கிராம நிர்வாக அலுவலர் புகார் கொடுத்தார். அதன்பேரில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் வழக்குப்பதிந்து டிராக்டரை பறிமுதல் செய்து, தப்பி ஓடிய டிராக்டர் டிரைவரை தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்