மது விற்றதாக டீக்கடைக்காரர் கைது
மது விற்றதாக டீக்கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் மற்றும் போலீசார் பெரியதிருக்கோணம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி பெரியதிருக்கோணம் தெற்குத்தெருவை சேர்ந்த அரிச்சந்திரன் (54) என்பவரது டீக்கடையில் சோதனை செய்தனர். அப்போது அவரது டீக்கடையின் பின்புறம் விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், மது விற்றது குறித்து வழக்குப்பதிவு செய்து அரிச்சந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.