ஆடு திருடியவர் கைது

சாக்கோட்டை அருகே ஆடு திருடியவர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2021-08-08 18:43 GMT
காரைக்குடி,

சாக்கோட்டை போலீஸ் சரகம் புதுவயல் காமராஜர் நகரைச் சேர்ந்தவர் கவிதா. இவரது ஆடுகள் அப்பகுதியில் மேய்ந்து கொண்டிருந்தன.அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் மேய்ந்து கொண்டிருந்த ஆடு ஒன்றினை தூக்கிக்கொண்டு தப்ப முயன்றார். இதனைக்கவனித்த அக்கம்பக்கத்தினர் அவரை சுற்றிவளைத்து பிடித்து சாக்கோட்டை போலீசில் ஒப்படைத்தனர்.விசாரணையில் அவர் பள்ளத்தூர் பகுதியைச் சேர்ந்த வேலு (வயது 32) என்று தெரியவந்தது. அவர் கைது செய்யப்பட்டார்.

மேலும் செய்திகள்