பாணாவரம் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

ஆடு திருடிய 2 பேர் கைது;

Update: 2021-08-08 18:33 GMT
காவேரிப்பாக்கம்

பாணாவரம் அடுத்த பள்ளமங்கலம் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 46) விவசாயி. இவர் வளர்த்து வந்த ஒரு ஆட்டை நேற்று முன்தினம் வீட்டின் முன் கட்டி வைத்திருந்தார். பின்னர் நேற்று காலை பார்த்தபோது ஆட்டை காணவில்லை. இது சம்பந்தமாக பாணாவரம் போலீஸ் நிலையத்தில் சக்திவேல் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் உப்பரந்தாங்கல் பகுதியைச் சேர்ந்த ரஜினி என்ற ஜானி (45), மாகாணிபட்டு மேட்டுத் தெருவைச் சேர்ந்த டில்லிபாபு (25) ஆகியோர் ஆடு திருடியது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து, ஆட்டை மீட்டனர்.

மேலும் செய்திகள்