மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் வெறிச்சோடியது

ஆடி அமாவாசையை யொட்டி சாமி தரிசனம் செய்யபக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் வெறிச்சோடி காணப்பட்டது.

Update: 2021-08-08 18:12 GMT
மேல்மலையனூர், 

மேல்மலையனூரில் உள்ள அங்காளம்மன் கோவிலில் நேற்று  ஆடி அமாவாசையை யொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.  இரவில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.ஆனால் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படவில்லை. இருப்பினும் பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து திருப்பி அனுப்பினர். இதனால் ஏமாற்றமடைந்த பக்தர்கள் ஆங்காங்கே வயல்வெளியில் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். இதனால் பக்தர்கள் இன்றி கோவில் வெறிச்சோடி காணப்பட்டது. இதனிடையே கோவிலில் உழவார பணி நடைபெற்றது. இதில் சாமி சிலைகள், பக்தர்கள் நடந்து செல்லும் பகுதி ஆகியவை சுத்தப்படுத்தப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இப்பணிகளை அறநிலையத்துறை உதவி ஆணையர் ராமு பார்வையிட்டார். அப்போது அறங்காவலர்கள் செந்தில்குமார் பூசாரி, தேவராஜ் பூசாரி, ராமலிங்கம் பூசாரி, செல்வம் பூசாரி, சரவணன் பூசாரி, வடிவேல் பூசாரி, சந்தானம் பூசாரி ஆகியோர் உடனிருந்தார்.

மேலும் செய்திகள்