கொரோனா விழிப்புணர்வு

கொரோனா விழிப்புணர்வு நடந்தது.

Update: 2021-08-08 18:01 GMT
அரவக்குறிச்சி
அரவக்குறிச்சி அருகே ஆலம்பாடி ஊராட்சி செனந்திராபுரத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுப்பது குறித்தும் கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதற்கு வேலம்பாடி ஊராட்சி தலைவர் ராணிகணேசன் தலைமை தாங்கினார். கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவடிவேல் கலந்துகொண்டு பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் வன்முறைகளை தடுப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். மேலும், கொரோனா வைரசை தடுக்க அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடித்து அரசின் வழிகாட்டு முறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. முன்னதாக வேலம்பாடி ஊராட்சி அண்ணாநகரில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இயக்கி வைத்தார்.

மேலும் செய்திகள்