கைத்தறி கண்காட்சி

கைத்தறி கண்காட்சி நடந்தது.

Update: 2021-08-08 17:58 GMT
கரூர்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் 7-வது கைத்தறி தினத்தையொட்டி அமைக்கப்பட்ட சிறப்பு கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனை முகாமினை கலெக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டு நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், கைத்தறி கண்காட்சியில் கரூர் மாவட்ட கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் கைத்தறி பெட்ஷீட்டுகள், தலையணை உறைகள், துண்டுகள், பருத்தி சேலை ரகங்கள், விருதுநகர் மாவட்ட அருப்புக்கோட்டை பகுதி பருத்தி சேலைகள் மற்றும் திருச்சி மாவட்ட உறையூர் பருத்தி சேலை ரகங்கள் ஆகியவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கைத்தறி துணிகளை வாங்கி பயன்படுத்தி நெசவாளர்களின் வாழ்வாரத்தை மேம்படுத்த முன்வர வேண்டும் என்றார். இதனைத்தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் கைத்தறி நெசவாளர்களுக்கான கைத்தறி ஆதரவு திட்டம் அரசின் பங்களிப்பு தொகையுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் 90 சதவீத அரசு மானியம் மற்றும் 10 சதவீத உறுப்பினர் பங்களிப்புடன் தறி உபகரணங்கள் சங்க உறுப்பினர்கள் 5 பேருக்கு தலா ரூ.35 ஆயிரம் மதிப்பிலான தறி உபகரணங்களும், கைத்தறி நெசவாளர்களுக்கு முத்ரா கடன் திட்டத்தின் கீழ் 2 பேருக்கு ரூ.50 ஆயிரம் கடன் உதவிகளையும் கலெக்டர் வழங்கினார்

மேலும் செய்திகள்