குழந்தை வரம் கேட்டு மண்சோறு சாப்பிட்ட பெண்கள்
குழந்தை வரம் கேட்டு மண்சோறு சாப்பிட்ட பெண்கள்;
சேத்துப்பட்டு
சேத்துப்பட்ைட அடுத்த கோட்டுப்பாக்கம் பரதேசி ஆறுமுகம் சுவாமி கோவிலில் குரு பூஜை விழா நடந்தது. குழந்தையில்லா ெபண்கள் கோவிலுக்கு வந்து அங்குள்ள குளத்தில் புனித நீராடினர். பின்னர் பரதேசி ஆறுமுகம் சுவாமியின் சன்னதியில் இருந்து பிரசாதத்தை வாங்கி வந்து குளத்தின் படிக்கட்டுகளின் மண்தரையில் வைத்து மண்டியிட்டு பெண்கள் குழந்தை வரம் கேட்டு தங்களின் கைகளை பின்னால் கட்டிக்கொண்டு வாயால் கவ்வி சாப்பிட்டனர்.
முன்னதாக வள்ளி, தெய்வானை சமேத முருகன், விநாயகர் ஆகியோருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதில் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.