மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி புதிதாக 40 பேருக்கு தொற்று
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியாகினார். புதிதாக 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
புதுக்கோட்டை:
40 பேருக்கு தொற்று
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கி உள்ளது. மாவட்டத்தில் நேற்று புதிதாக 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருந்தது. இதனால் மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்து 423 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 29 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர்.
இதனால் டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து 719 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 333 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் ஒருவர் பலி
இந்த நிலையில் மாவட்டத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியாகினார். இதனால் மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 371 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், கைகளை கழுவ கிருமிநாசினி பயன்படுத்துதல் உள்ளிட்டவற்றை தொடர்ந்து பொதுமக்கள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா 3-வது அலை வராமல் தடுக்க முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.