செங்கம் அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல்
செங்கம் அருகே குடிநீர் கேட்டு சாலை மறியல்;
செங்கம்
செங்கம் அருகே உள்ள மேல்பள்ளிப்பட்டை அடுத்த சத்யாநகர் பகுதியில் முறையாக குடிநீர் வினியோகம் செய்வதில்லை என கூறப்படுகிறது.
மேலும் சத்யாநகர் பகுதிக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து குடிநீர் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்த நிலையில் குடிநீர் கேட்டு 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாா் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதைத் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.