புதுச்சத்திரம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி சாவு

புதுச்சத்திரம் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளி உயிாிழந்தாா்.

Update: 2021-08-08 17:43 GMT
சிதம்பரம், 

புதுச்சத்திரம் அடுத்த மணிக்கொல்லை கிராமம்  மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 30). தொழிலாளி. சம்பவத்தன்று அந்த பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழாவில் , சாமி ஊர்வலம் நடைபெற்றது. டிராக்டரில் சாமியை வைத்து எடுத்து சென்றனர். 

அப்போது டிராக்டரில் ராஜசேகரும் வந்தார். கிராமத்தில் வடக்கு தெருவில் வந்த போது, டிராக்டரில் இருந்த ராஜசேகர் திடீரென தவறி கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி  ராஜசேகர் மீது ஏறிஇறங்கியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்த புகாரின் பேரில் புதுச்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரியை ஓட்டி வந்த  புதுக்கோட்டையை சேர்ந்த  அருள்(20) என்பவரை கைது செய்தனர். 

மேலும் செய்திகள்