அரக்கோணம் அருேக மோட்டார்சைக்கிளில் சென்ற வாலிபர் கார் மோதி பலி

அரக்கோணம் அருேக மோட்டார்சைக்கிளில் சென்ற வாலிபர் கார் மோதி பலி

Update: 2021-08-08 17:23 GMT
அரக்கோணம்

அரக்கோணத்தை அடுத்த கைனூர்கண்டிகையைச் சேர்ந்த சிகாமணியின் மகன் சிலம்பரசன் (வயது 30). கைனூர் நேதாஜி நகரை சேர்ந்த வெங்கடேசனின் மகன் ரவிராகுல் (21). நண்பர்களான இருவரும் நேற்று இரவு ஒரு மோட்டார்சைக்கிளில் அரக்கோணத்துக்கு வந்து, பின்னர் அங்கிருந்து கைனூரை நோக்கி சென்று கொண்டிருந்தனர். 

அரக்கோணத்தை அடுத்த சோளிங்கர் ரோடு நேதாஜி நகர் அருகே சென்றபோது, அந்த வழியாக எதிரே சோளிங்கரில் இருந்து அரக்கோணத்தை நோக்கி வந்த ஒரு காரும், அவர்கள் சென்ற மோட்டார்சைக்கிளும் நேருக்கு நேர் மோதி கொண்டன. அதில் இருவரும் தூக்கி வீசப்பட்டதில் சிலம்பரசன் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். ரவிராகுல் படுகாயம் அடைந்தார். அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

விபத்து பற்றி தகவல் அறிந்ததும் அரக்கோணம் டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சிலம்பரசனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்