கலவை அருேக விவசாய நிலத்தில் பதுக்கி வைத்திருந்த 14,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்
விவசாய நிலத்தில் பதுக்கி வைத்திருந்த 14,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்
வாலாஜா
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை பகுதியில் ஓரிரு நாட்களுக்கு முன்பு சரக்கு வேனில் 3,500 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் ராணிப்பேட்டை மது அமலாக்கப் பிரிவு இன்ஸ்ெபக்டர் யுவராணி, சப்-இன்ஸ்ெபக்டர் சித்ரா ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் கலவையை அடுத்த செய்யாத்துவண்ணம் பத்மாநகர் அருகில் ஒரு விவசாய நிலத்தில் எரிசாராயம் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் செய்யாத்துவண்ணம் பத்மாநகர் பகுதியில் தீவிர சோதனைச் செய்தனர். அங்குள்ள விவசாய நிலத்தில் 395 கேன்களில் 14 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தைப் பதுக்கி வைத்திருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. கலவை போலீசாரின் உதவியோடு எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர். அந்த நிலத்தின் காவலாளியான வினோத் என்பவரை பிடித்து எரிசாராயம் எங்கிருந்து கொண்டு வரப்பட்டது, அதன் பின்னணியில் யார் யார் உள்ளனர்? என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.