உளுந்தூர்பேட்டையில் கேட்பாரற்று கிடந்த 19 ரேஷன் அரிசி மூட்டைகள்
உளுந்தூர்பேட்டையில் கேட்பாரற்று கிடந்த 19 ரேஷன் அரிசி மூட்டைகள் தாசில்தார் விசாரணை
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை பேரூராட்சியில் உள்ள கீரனூர் பகுதியில் கேட்பாரற்ற நிலையில் 19 ரேஷன் அரிசி மூட்டைகள் கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் உளுந்தூர்பேட்டை தாசில்தார் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது குறிப்பிட்ட இடத்தில் 19 ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த அரிசி மூட்டைகளை கைப்பற்றி தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.
மேலும் அந்த ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்த மர்ம நபர் யார்? அவற்றை எங்கே கடத்தி செல்வதற்காக பதுக்கி வைகப்பட்டிருந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.