தர்மபுரி மாவட்டத்தில் 32 பேருக்கு கொரோனா ஒருவர் உயிரிழப்பு
தர்மபுரி மாவட்டத்தில் 32 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. மேலும் ஒருவர் உயிரிழந்தார்.
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் நேற்று மேலும் 32 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனை மற்றும் தற்காலிக தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். தர்மபுரி மாவட்டத்தில் ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்தவர்களில் 28 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பினார்கள். இந்த தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதன்படி மாவட்டத்தில் தற்போது 330 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் இதுவரை 237 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26 ஆயிரத்து 332 பேர் ஆகும்.