திருப்பூர் பகுதிகளில் அரசு வழிகாட்டுதலின் படி நேற்று வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

திருப்பூர் பகுதிகளில் அரசு வழிகாட்டுதலின் படி நேற்று வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

Update: 2021-08-08 16:39 GMT
திருப்பூர், 
திருப்பூர் பகுதிகளில் அரசு வழிகாட்டுதலின் படி நேற்று வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. 
வழிபாட்டு தலங்கள் மூடல் 
கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால் தமிழக அரசு மீண்டும் கட்டுப்பாடுகளை அறிவித்து வருகிறது. அதன்படி ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 
இதனால் கோவில்கள் மற்றும் ஆலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள் அனைத்திலும் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை, ஞாயிறுக்கிழமை ஆகிய 3 நாட்கள் வழிபாட்டிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை வருகிற 23-ந் தேதி வரை நீட்டித்து தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 
தர்ப்பணம் 
இந்நிலையில் ஆடி அமாவாசை தினமான நேற்று கோவில்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளதால் திருப்பூரில் ஈஸ்வரன் கோவில், பெருமாள் கோவில் உள்பட முக்கிய கோவில்கள் பலவும் மூடப்பட்டிருந்தன. இதனால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாமல் அவதியடைந்தனர். 
இதுபோல் குமரன் ரோட்டில் உள்ள புனித கேத்தரீன் ஆலயம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள ஆலயங்களிலும் பிரார்த்தனைகள் நடைபெறவில்லை. மேலும், மசூதிகளிலும் தொழுகை நடக்கவில்லை. இதற்கிடையே ஆடி அமாவாசையன்று முன்னோர்களுக்கு பலரும் தர்ப்பணம் கொடுக்க நீர்நிலைகள் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வார்கள். அரசின் இந்த உத்தரவு காரணமாக தர்ப்பணம் கொடுக்க நொய்யல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் யாரும் வரவில்லை. 

மேலும் செய்திகள்