ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நேற்று தாராபுரம் அமராவதி ஆற்றில் நடைபெற்றது.
ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நேற்று தாராபுரம் அமராவதி ஆற்றில் நடைபெற்றது.
தாராபுரம்,
ஆடி அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிகழ்ச்சி நேற்று தாராபுரம் அமராவதி ஆற்றில் நடைபெற்றது.
ஆடி அமாவாசை
ஆடி அமாவாசை அன்று பூமிக்கு வரும் மூதாதையா்கள் தை அமாவாசை அன்று பூமியை விட்டுசெல்கின்றனா் என்பது இந்துக்களின் நம்பிக்கை. அந்த நாளில் தீா்த்த தலங்களுக்கு சென்று எள், தண்ணீா் இறைத்து அவா்களின் தாகத்தை தீா்க்க வேண்டும் என்பது ஐதீகம்.
அவ்வாறு செய்வதால் பாவங்கள் நீங்கி அவா்களுக்கு முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. இந்தநிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 2-ந்தேதி மற்றும் 3, 8 ஆகிய தேதிகளில் கோவில் வழிபாட்டு தளங்கள் மூடப்பட்டது.
முன்னோர்களுக்கு தர்ப்பணம்
இதனை அறியாததிரளான பொதுமக்கள் ஆடி அமாவாசை தினமான நேற்று தாராபுரம் அகஸ்தீஸ்வரா் கோவில் அருகே அமராவதி ஆற்றங்கரையில் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனா். அதற்காக அவர்கள் ஆற்றில் புனித நீராடி ஆற்றங்கரையில் அமர்ந்து தங்களதுமுன்னோர்களுக்கு எள்,தண்ணீா்ஆகியவற்றை இறைத்து தர்ப்பணம் கொடுத்துவிட்டு கோவிலுக்கு வெளியில் நின்று வழிபட்டனர்.
தொடர்ந்து கொரோனா பரவல் காரணமாக அகஸ்தீஸ்வரா் கோவில் நடை அடைக்கப்பட்டு இருந்ததால் அவர்கள் கோவிலுக்கு வெளியே நின்று சாமிதரிசனம் செய்து சென்றனர்.