தியாகதுருகம் பகுதியில் யூரியா தட்டுப்பாடு விவசாயிகள் புகார்

தியாகதுருகம் பகுதியில் யூரியா தட்டுப்பாடு விவசாயிகள் புகார்

Update: 2021-08-08 16:24 GMT
கண்டாச்சிமங்கலம்

தியாகதுருகம் பகுதியில் கரும்பு, நெல், மணிலா உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் பயிர்  செய்துள்ளனர். இந்நிலையில் விவசாயிகள் பயிர்களுக்கு தேவையான உரங்களை வாங்க சென்றபோது தியாகதுருகம் பகுதியில் உள்ள உரக்கடைகளில் யூரியா இல்லை என கூறுகின்றனர். ஒருசில கடைகளில் கூடுதல் விலை கேட்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். 

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்,  உரக்கடை உரிமையாளர்கள் விற்பனை முனைய எந்திரத்தின் மூலம் பயனாளிகளின் ஆதார் எண்ணை பதிவு செய்து விவசாயிகளுக்கு உரங்களை விற்பனை செய்ய வேண்டும். ஆனால் சில கடை உரிமையாளர்கள் முறையாக பதிவு செய்யாமல் உரங்களை விற்பனை செய்து வந்துள்ளனர். இதனால் கடை உரிமையாளர்கள் நிறுவனத்திடம் யூரியா கேட்டபோது உங்களுடைய விற்பனை முனைய எந்திரத்தில் உங்களிடம் யூரியா இருப்பு உள்ளதாக காண்பிக்கிறது என்று கூறி யூரியா தரமறுத்ததாக தெரிகிறது. ஒரு சில கடைகளில் மட்டுமே யூரியா உள்ளதால் கூடுதல் விலைக்கு விற்பனை செய்துவருகின்றனர். உரக்கடை உரிமையாளர்கள் விற்பனை முனைய எந்திரத்தில் பதிவு செய்யாமல் யூரியாவை விற்பனை செய்ததாலும், இதை கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் கண்டும், காணாமல் இருந்ததாலும் தற்போது விவசாயிகளின் பயிர்களுக்கு தேவையான யூரியா தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. எனவே உரக்கடைகளை வேளாண் அதிகாரிகள் முறையாக கண்காணித்து விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் யூரியா கிடைக்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினா்.

மேலும் செய்திகள்