முக கவசம் அணிந்து வந்த பயணிகளுக்கு மரக்கன்று
திண்டுக்கல்லில் முக கவசம் அணிந்து வந்த ரெயில் பயணிகளுக்கு மரக்கன்று வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு முக கவசம் அணிந்து வந்த பயணிகளுக்கு ரெயில்வே அதிகாரிகள் மரக்கன்று வழங்கியும், அணியாமல் வந்தவர்களுக்கு முக கவசம் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் ரெயில் நிலைய மேலாளர் கோவிந்தராஜ், ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன், தனிப்பிரிவு ஏட்டு ராஜேஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.