தூத்துக்குடி அருகே வாலிபரிடம் பணம் பறித்த 2பேர் கைது

தூத்துக்குடி அருகே, வாலிபரிடம் பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-08-08 13:13 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி அத்திமரப்பட்டி சர்ச் தெருவைச் சேர்ந்தவர் தங்கராஜா. இவருடைய மகன் மாரிசெல்வம் (வயது 23). இவர் சிறுபாட்டில் இருந்து அத்திமரப்பட்டி செல்லும் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அவர் அந்த பகுதியில் உள்ள கண்மாய் அருகே சென்றபோது, அங்கு வந்த முத்தையாபுரம் மகாலட்சுமி நகரைச் சேர்ந்த குமார் மகன் சாம் ஜோயல் (20), சாந்திநகரைச் சேர்ந்த குமார்ராஜா மகன் சதீஷ்குமார் (21) ஆகிய 2 பேரும், மாரிசெல்வத்தை வழிமறித்து, அவரிடம் இருந்து செல்போன், ஏ.டி.எம். கார்டு மற்றும் ரூ.12 ஆயிரம் ஆகியவற்றை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், புதுக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சாம் ஜோயல், சதீஷ்குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்