ஓட்டப்பிடாரம் அருகே வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

ஓட்டப்பிடாரம் அருகே வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-08-08 13:04 GMT
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள குலசேகரநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த வேல்சாமி மகன் வேல்ராஜ் (வயது 26). இவர் ஆடு மேய்க்கும் தொழிலாளி. கடந்த சில நாட்களாக பெற்றோரிடம் புதிதாக மோட்டார் சைக்கிள் வாங்கித் தருமாறு கேட்டு வந்துள்ளார்.  பெற்றோர் மோட்டார் சைக்கிள் வாங்கித் தராதநிலையில் அவர் மனவேதனையுடன் இருந்துள்ளார்.
இந்த நிலையில் அவர், நேற்று முன்தினம் இரவு  வீட்டில் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன், சம்பவ வீ்ட்டுக்கு சென்று வேல்ராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இச்சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்