பள்ளிப்பட்டு பஸ் நிலையத்தில்போலீஸ் பூத் செப்பனிடும் பணி தீவிரம்

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு நகரம் தமிழக மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு இடையே எல்லையோரத்தில் அமைந்துள்ள பகுதியாகும். இங்கு தமிழக மக்கள் மட்டுமின்றி ஆந்திர மாநிலத்தில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்களும் தங்களது அன்றாடத் தேவைகளுக்காக பள்ளிப்பட்டு வந்து செல்கின்றனர்.;

Update: 2021-08-08 12:58 GMT
மேலும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த விவசாயிகளும் தாங்கள் பயிரிட்ட காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இதனால் பள்ளிப்பட்டு பஸ் நிலையம் எப்போதும் கூட்டத்தால் நிரம்பி வழியும். இதனால் பஸ்நிலையத்தில் பெண்களின் பாதுகாப்புக்காகவும், இப்பகுதி போலீசாருக்கு உதவும் வகையிலும் பள்ளிப்பட்டு ஜெயின் சமூகத்தினர் 2 ஆண்டுகளுக்கு முன் ரூ.2 லட்சம் செலவு செய்து போலீஸ் பூத்தை தயார் செய்தனர். ஆனால் போலீஸ் பூத் பள்ளிப்பட்டு பஸ் நிலையத்தில் நிறுவப்படாமல் காந்தி சிலை அருகே ஒரு தனியார் கட்டிடத்தில் வெயிலிலும், மழையிலும் காய்ந்தும், நனைந்தும் நாசமாக போனது. இந்த நிலையில் தற்போது இது குறித்து இப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.

இந்த போலீஸ் பூத்தை பள்ளிப்பட்டு பஸ் நிலையத்தில் மீண்டும் அமைக்க ஏற்பாடு நடைபெற்று வருகிறது. தற்போது இந்த பூத்தை உடனடியாக உபயோகப்படுத்த முடியாமல் சேதமாகி உள்ளதால் அதை செப்பனிடும் பணி 
தொடங்கப்பட்டது. பணி முடிவடைந்ததும் இந்த போலீஸ் பூத் விரைவில் பொதுமக்கள் நலனுக்கு பயன்படும் வகையில் திறக்கப்படும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்