தொழில், திறன் சார்ந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தொழில், திறன் சார்ந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்

Update: 2021-08-08 01:42 GMT
திருச்சி, 
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தொழில் மற்றும் திறன் சார்ந்த படிப்புகளுக்கு சேர்க்கை நடைபெறுகிறது. இதில் டி.டி.யு. கவுஷல் கேந்திரா என்பது திறன் சார்ந்த பட்டப்படிப்புகளை வழங்குவதற்காக பல்கலைக்கழக மானியக்குழு உதவியுடன் உயர்கல்வி நிறுவனத்தால் செயல்படுத்தப்படும் ஒரு பிரத்தியேக மையமாகும். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் டி.டி.யு. கவுஷல் கேந்திரா மையம் கடந்த 2015-ம் ஆண்டு முதல் தொழில் மற்றும் திறன் சார்ந்த படிப்புகள் தொடங்கப்பட்டது. இதில் ஆட்டோ மொபைல் டெக்னாலஜி, லாஜிஸ்டிக்ஸ் அண்ட் சப்ளை செயின் மேனேஜ்மெண்ட், மின்னணு பழுதுபார்க்கும் படிப்பு என்ற மூன்று வெவ்வேறு துறைகள் சார்ந்த 3 வருட பட்டப்படிப்புகளை நடத்தி வருகிறது.
இந்தப் படிப்புகளுக்கான பாடத்திட்டங்கள் 60 சதவீதம் செய்முறை பயிற்சியுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது. துறை சார்ந்த நிறுவனங்களில் செய்முறை பயிற்சிகள் தரப்படுகிறது. பட்டப்படிப்பில் மாணவர் தரம் உயர்ந்த பயிற்சிக்கூடங்கள் செய்முறை பயிற்சிகள் என உடனடி வேலை வாய்ப்புக்கான அனைத்து பயிற்சிகளும் மிகக் குறைந்த கல்விக் கட்டணத்தில் நடைமுறையில் உள்ளது. இந்த படிப்பிற்கான 2021-2022-ம் கல்வியாண்டுகான சேர்க்கை நடைபெற்று வருகிறது. http://oms.bdu.ac.in/admissions என்ற இணையதள முகவரியில் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு மாணவர் சேர்க்கைக்காக 8056061126, 8248748984, 9543227731 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். வருகிற 31-ந்தேதி இணையதளத்தில் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கடைசி நாள் ஆகும்.

மேலும் செய்திகள்