இன்று பக்தர்கள் தரிசனத்திற்கு தடை
பிரகதீஸ்வரர் கோவிலில் இன்று பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மீன்சுருட்டி:
அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் வரலாற்று சிறப்புமிக்க பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. தற்போது கொரோனா வைரஸ் 3-வது அலை ஏற்படுவதை தடுக்க அரசு அறிவுறுத்தலின்படி மாவட்ட நிர்வாகத்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி அரியலூர் மாவட்டத்தில் கடந்த 1-ந் தேதி முதல் 3 நாட்கள் கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை) ஆடி அமாவாசையை முன்னிட்டு பிரகதீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.