சத்தி அருகே போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டில் சுற்றித்திரியும் கழுதைகள்
சத்தி அருகே போக்குவரத்துக்கு இடையூறாக ரோட்டில் கழுதைகள் சுற்றித்திரிகின்றன.
சத்தியமங்கலம் அடுத்த கே.என்.பாளையம் செல்லும் வழியில் தினமும் ஏராளமான 2 மற்றும் 4 சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் அடிக்கடி கழுதைகள் சுற்றி திரிகின்றன.
இவை ரோட்டில் ஒன்றுகொன்று சண்டையிட்டு வாகனங்கள் மீது விழ வாய்ப்பு உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து விபத்துகளை சந்திக்க நேரிடும். எனவே ரோட்டில் கழுதைகள் சுற்றித்திரிவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.