எஸ்.புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான புழுதிபட்டி, செட்டிகுறிச்சி, தர்மபட்டி, கே.புதுப்பட்டி, குன்னத்தூர், பிரான்பட்டி, நாகமங்கலம், கரிசல்பட்டி ஆகிய பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. காலை முதலே வெயிலின் தாக்கம் இருந்து வந்த நிலையில் மதியம் திடீரென சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. சாலையோரங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.