திருநங்கைக்கு கத்திக்குத்து
காரைக்குடியில் திருநங்கைக்கு கத்திக்குத்து விழுந்தது.
காரைக்குடி,
அவர் வசித்து வந்த இடத்தில் அம்மன் சிலை வைத்து சுவாமி வழிபாடு நடத்தி அங்கு வரும் பக்தர்களுக்கு குறி சொல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். குறி சொல்லும் நேரம் போக மற்ற நேரங்களில் இவர் கோவிலூர் அருகே கரும்பு ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஏற்கனவே சூடாமணி புரத்தில் இவரோடு வசித்து வந்த திவாகர் என்ற தயாஸ்ரீ (19) முரளி என்ற வைஷிகா (21) மற்றும் அவர்களது குழுவினர் மாயாவின் வீட்டிற்கு வந்து மாயாவிடம் குறி சொல்லி மக்களை ஏமாற்றி பணம் வாங்க கூடாது. இது நமது இனத்திற்கே அவமானமாக இருக்கிறது என்று கூற, இரு தரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த பூமிநாதன் கம்பை எடுத்து அங்கு வந்தவர்களை இங்கிருந்து ஓடி விடுங்கள் என்று கூறி ஆபாசமாக பேசி தாக்கியுள்ளார். . மேலும் கத்தியால் தயாஸ்ரீயை குத்தியுள்ளார். இதில் அவருக்கு கையில் ரத்தக் காயம் ஏற்பட்டது. காயமடைந்த தயாஸ்ரீ, வைஷிகா ஆகிய இருவரும் காரைக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் காரைக்குடி வடக்கு போலீசார் மாயா, பூமிநாதன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.