வியாபாரி பலி

மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் வியாபாரி பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2021-08-07 17:40 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் வண்டிக்காரதெரு டாக்டர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் அபூபக்கர் சித்திக் என்பவரின் மகன் பகுர்தீன் (வயது 47).மாவு அரைத்து விற்பனை செய்து வரும் இவர் ராமநாதபுரத்தில் இருந்து தேவிபட்டிணம் நோக்கி வியாபாரத்திற்காக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். மரப்பாலம் பகுதியில் சென்றபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் நேருக்குநேர் மோதி விபத்துக்கு உள்ளானதில் சம்பவ இடத்திலேயே பகுர்தீன் பரிதாபமாக பலியானார். இந்த விபத்தில் படுகாயம் அடைந்த மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த ராமநாதபுரம் ஆதம் நகரை சேர்ந்த இளங்கோ என்பவரின் மகன் கோகுல்நாத் (20) மற்றும் தங்கப்பா நகரை சேர்ந்த தங்கச்சாமி மகன் சபரி (20) 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் 2 பேரும் ராமநாத புரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் கேணிக் கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்