கொரோனா விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு

கோவில்பட்டியில் கொரோனா விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Update: 2021-08-07 17:11 GMT
கொரோனா விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில் கோவில்பட்டி காவல் உட்கோட்டத்துக்கு உட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு ஸ்லோகம், ஓவியம், போஸ்டர் டிசைனிங் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கோவில்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பரிசளிப்பு விழா நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் ஜான்கணேஷ் வரவேற்றார். கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு உதயசூரியன் தலைமை தாங்கி, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சத்யா, முதுநிலை தமிழ் ஆசிரியர் ஆறுமுகக்கனி, பட்டதாரி தமிழ் ஆசிரியர் கிறிஸ்டோபர் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்