திருவாரூர் கமலாலயம் குளத்தில் கதவுகள் அடைப்பு

ஆடி அமாவாசையையொட்டி தர்ப்பணம் கொடுக்க தடைவிதிக்கப்பட்டதால் திருவாரூர் கமலாலயம் குளத்தில் கதவுகள் அடைக்கப்பட்டுள்ளன.;

Update: 2021-08-07 16:48 GMT
திருவாரூர்:
ஆடி அமாவாசையையொட்டி தர்ப்பணம் கொடுக்க தடைவிதிக்கப்பட்டதால் திருவாரூர் கமலாலயம் குளத்தில் கதவுகள் அடைக்கப்பட்டுள்ளன. 
தர்ப்பணம் கொடுக்க தடை 
கொரோனா 3-வது அலை பரவுவதை தடுக்கும் வகையில் இன்று(ஞாயிற்றுக்கிழமை)  ஆடி அமாவாசை மற்றும் வருகிற 11-ந்தேதி ஆடிப்பூரம் ஆகிய நாட்களில் பக்தர்கள் அதிகளவில் கூடுவதை தவிர்த்திடும் வகையில் கோவில்களில் பக்தர்கள் வழிபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கோவில்களில் அர்ச்சகர்கள் மட்டும் கலந்து கொண்டு ஆகமவிதிப்படி பூஜைகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் ஆற்றங்கரை மற்றும் குளக்கரைகளில் ஆடி அமாவாசையை முன்னிட்டு அதிகளவில் மக்கள் கூடி தர்ப்பணம் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
கதவுகள் அடைப்பு 
இதையடுத்து திருவாரூர் கமலாலயம் குளத்தில் இறங்கக்கூடிய வழிபாதை கதவுகள் அடைக்கப்பட்டு பூட்டப்பட்டன. கொரோனா 3-வது அலை பரவுவதை தடுக்க அரசு மேற்கொள்ளும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் செய்திகள்