அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடக்க இருப்பது குறித்து இந்து அறநிலையத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடக்க இருப்பது குறித்து இந்து அறநிலையத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.;
அவினாசி:
அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடக்க இருப்பது குறித்து இந்து அறநிலையத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
அவினாசிலிங்கேஸ்வரர் கோவில்
அவினாசியில் முதலையுண்ட பாலகனை பதிகம்பாடி மீட்டெடுத்த பெருமையும், காசிக்கு நிகரான கோவில் என்ற வரலாற்று சிறப்புமிக்க அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. தமிழகம் மட்டுமல்லாது கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்தும் பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்வது நடைமுறையில் உள்ளது. சிறப்புமிக்க இக்கோவில் கும்பாபிஷேகம் நடந்து 13 ஆண்டுகள் ஆகிறது. ஆக மவிதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.
இக்கோவில் கும்பாபிஷேகம் நடந்து 13 ஆண்டுகள் ஆகி விட்டது. இந்த நிலையில் இந்து சமய அறநிலைய துறை கூடுதல் ஆணையர் கண்ணன், இணை ஆணையர் நடராஜ், உதவி ஆணையர் வெங்கடேஷ், செயற்பொறியாளர் ஜமுனா தேவி, ஆகியோர் அவினாசிலிங்கேசுவரர் கோவிலுக்கு நேற்று வந்தனர்.
கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை
பின்னர் கோவில் சன்னதிகள், சிற்பங்கள் கதவுகள், கல்தூண்கள், தரைதளங்கள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது சிதிலமடைந்த நிலையில் உள்ள தரைதளங்களை மாற்றவும், கோவில் வளாகம் முழுவதும் பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு, ராஜகோபுரம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலு வண்ணம் தீட்டி புதுப்பொழிவு பெறுவதற்கு இந்து அறநிலையதுறையில் பரிந்துறை செய்து கூடிய விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் போது கோவில் குருக்கள் தியாகராஜன், ஜெயகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.