மடத்துக்குளம் அருகே டிராக்டர் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் 5 பேர் காயம்அடைந்தனர்.

மடத்துக்குளம் அருகே டிராக்டர் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் 5 பேர் காயம்அடைந்தனர்.

Update: 2021-08-07 16:23 GMT
போடிப்பட்டி
மடத்துக்குளம் அருகே டிராக்டர்  மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில்  5 பேர் காயம்அடைந்தனர்.
தொழிலாளர்கள்
 இந்த விபத்து குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
 பொள்ளாச்சியை அடுத்த அர்தநாரிபாளையத்தை சேர்ந்த ரங்கசாமி (வயது 50), அதே ஊரைச் சேர்ந்த சென்னியப்பன் ( 47), அவருடைய மனைவி ராமாத்தாள் ( 43), மகன் மணிகண்டன் ( 21) மற்றும் வீர முத்து (வயது 30) ஆகிய 5 பேரும்  மூங்கில் படல் செய்யும் வேலைக்காக ஒரு சரக்கு ஆட்டோவில் பவானி நோக்கி சென்றனர்.
 சரக்கு ஆட்டோவை பூவலப்பருத்தியை சேர்ந்த டிரைவர் பிரகாஷ் (வயது 32) என்பவர் ஓட்டி வந்தார். அந்த ஆட்டோ நேற்று காலை 8 மணியளவில் துங்காவி பகுதியில் வந்து கொண்டிருந்தது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு ஆட்டோ எதிரே வந்த டிராக்டர் மீது மோதியது. இந்த விபத்தில் சரக்கு ஆட்டோ அந்தரத்தில் பறந்தது. ஆட்டோவிலிருந்த தொழிலாளர்கள் சாலையில் தூக்கி வீசப்பட்டனர்.
5 பேர் காயம்
உடனடியாக அருகிலிருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் ரங்கசாமி,  சென்னியப்பன்,  ராமாத்தாள், மணிகண்டன், வீர முத்து ஆகிய 5 பேரும் காயம் அடைந்தனர். இதில் பலத்த காயம்அடைந்த ரங்கசாமி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.  மற்ற  4 பேரும் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினர்.இந்த விபத்து குறித்து கணியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இந்தநிலையில் விபத்து நடந்த இடத்துக்கு அருகிலுள்ள வீட்டிலிருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவான விபத்துக் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.அதில் டிராக்டர் செல்வதும் சில நொடிகளில் சரக்கு ஆட்டோ அந்தரத்தில் பறந்து வருவதும், சாலையில் விழுந்த பெண் சாவகாசமாக எழுந்து நடந்து வரும் காட்சிகளும் பதிவாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்